கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதம்

கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதம்

Update: 2022-12-26 20:45 GMT

கடத்தூர்

நம்பியூர் அருகே உள்ள கரட்டுப்பாளையம் ஓணான்கரடு பகுதியை சேர்ந்தவர் தாண்டவமூர்த்தி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் இடையே நடைபாதை தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வருவாய்த்துறையினர் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்தநிலையில் நேற்று தாண்டவமூர்த்தி மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் கோபி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். ஆனால் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. மேலும் பாதுகாப்புக்காக போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் தாண்டவமூர்த்தி சுமார் 20 பேருடன் அங்கு வந்தார். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.

பின்னர் தாண்டவமூர்த்தி மற்றும் நாம் தமிழர் கட்சி மாநில கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பொறுப்பாளர் மோகனவேல், சேலம் மாவட்ட பொறுப்பாளர்கள் ராஜேஸ், ரஞ்சித் உள்ளிட்ட 4 பேரை மட்டும் அலுவலகத்திற்குள் அனுமதித்தார்கள். அப்போது அலுவலகத்தில் ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் பொறுப்பில் இருந்த நம்பியூர் தாசில்தார் பெரியசாமி நடை பாதை தொடர்பான பிரச்சினை குறித்து ஆர்.டி.ஓ. திவ்யபிரியதர்ஷினி அளித்திருந்த உத்தரவை அவர்களிடம் அளித்தார். அதை பெற்றுக்கொண்ட அவர்கள், அலுவலக நகலையும் காண்பிக்க வலியுறுத்தி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்