கூத்தப்பாடியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்

Update: 2022-12-26 18:45 GMT

பென்னாகரம்:

பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கலப்பம்பாடி மேல்நிலைப்பள்ளி சார்பில் கூத்தப்பாடி கிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் 2 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 50 மாணவர்கள் கலந்து கொண்டு கூத்தப்பாடி பகுதியில் தூய்மை பணியை மேற்கொண்டனர். மேலும் ஊர் புறத்தூய்மை, தூய்மை பாரதம், இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு, வாசிப்பின் அவசியம், பெண் கல்வியின் அவசியம் குறித்து பொது மக்களுக்கு எடுத்து கூறினர்.

கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த முகாம் வருகிற 30-ந் தேதி வரை நடைபெறுகிறது. தினந்தோறும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெறுகிறது. ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் சரவணன், கஞ்சப்பழனி மற்றும் ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்