இனி மெட்ரோ ரெயில் நிலையத்தில் செக்-இன் செய்யலாம் - எப்போது முதல் ?

மெட்ரோ ரெயில் நிலையங்களில் விமான பயணிகளுக்கான செக்-இன் வசதி முழுமையாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

Update: 2023-01-19 12:08 GMT

சென்னை,

விமானப் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலைய செக்-இன் வசதி சாத்தியம் குறித்து ஆராய்வதற்காக கிக்-ஆப் கூட்டம் மீனம்பாக்கத்தில் நடைபெற்றது. விமான நிலைய இயக்குனர் சரத்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் மெட்ரோ ரெயில் அதிகாரிகள், விமான நிறுவன அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சோதனை அடிப்படையில் இந்த வசதியை ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் விமானம் புறப்படுவதற்கு முன் பயணிகளின் கூட்டம் மற்றும் சுமைகளை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள கவுண்டரில் பயணிகள் தங்கள் உடமைகளை சரிபார்த்தவுடன் போர்டிங் பாஸ் வழங்கப்படும். விமானத்தில் ஏறுவதற்கு நேராக விமான நிலையத்தை அடையலாம். இந்த புதிய நடைமுறை மார்ச் முதல் சோதனையாக நடத்தப்படும். ஏப்ரல்14ந் தேதி முதல் மெட்ரோ ரெயில் நிலையங்களில் விமான பயணிகளுக்கான செக்-இன் வசதி முழுமையாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்