நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை(வியாழக்கிழமை) மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Update: 2023-05-16 18:45 GMT

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை(வியாழக்கிழமை) மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சீர்காழி

சீர்காழி அருகே அரசூர், ஆச்சாள்புரம், எடமணல், திருவெண்காடு ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(வியாழக்கிழமை) நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறும் அரசூர், ஆச்சாள்புரம், எடமணல், திருமுல்லைவாசல், செம்மங்குடி, திட்டை, புத்தூர், , வடரெங்கம், அகனி, குன்னம், கொள்ளிடம், அணைக்காரன்சத்திரம், மகேந்திரப்பள்ளி, பழையார் புதுப்பட்டிணம், பழையபாளையம், மாங்கனாம்பட்டு, திருவெண்காடு, மேலையூர், மங்கைமடம், பூம்புகார், மேலச்சாலை, நாங்கூர், திருவாலி, திருநகரி, பெருந்தோட்டம், அண்ணன் பெருமாள் கோவில் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

திருவெண்காடு

இதேபோல் திருவெண்காட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திருவெண்காடு, பூம்புகார், வானகிரி, பெருந்தோட்டம், தென்னாம்பட்டினம், நாங்கூர், மங்கை மடம், கீழச்சாலை, திருவாலி உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி தெரிவித்தார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் நீடூர், பெரம்பூர் மற்றும் கடலங்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான நீடூர், மல்லியக்கொல்லை, வில்லியநல்லூர், கொண்டல், பாலாக்குடி, தாழஞ்சேரி, கொற்கை, அருண்மொழித்தேவன், கங்கணம்புத்தூர், மேலாநல்லூர், நடராஜபுரம், கீழமருதாந்தநல்லூர், மேலமருதாந்தநல்லூர், பொன்மாசநல்லூர், பெரம்பூர், கடக்கம், கிரியனூர், சேத்தூர், முத்தூர், எடக்குடி, பாலூர், கொடைவிளாகம், ஆத்தூர், கடலங்குடி, வானாதிராஜபுரம், சோழம்பேட்டை, மாப்படுகை, கோழிகுத்தி, முருகமங்கலம், திருமணஞ்சேரி, ஆலங்குடி ஆகிய பகுதிகளுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

இந்த தகவலை மயிலாடுதுறை செயற்பொறியாளர் சந்தானகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்