இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு
விநாயகர் ஊர்வலத்தையொட்டி இன்று மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நாகை வடக்கு கோட்ட இயக்குதலும், பராமரித்தலும் உதவி செயற்பொறியாளர் (பொ) சதிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விநாயகர் ஊர்வலம் நடைபெற இருப்பதால், தேவைப்படும் இடங்களில் இன்று (திங்கட்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகை கோட்டத்திற்கு உட்பட்ட நாகை நகரம், வெளிப்பாளையம், நாகூர் ஆகிய இடங்களில் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு விநாயகர் ஊர்வலம் நடைபெற இருப்பதால், அதன் பாதுகாப்பு காரணமாக அவ்வப்போது தேவைப்படும் இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும். அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க கேட்டு கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.