ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்களுக்கு நோட்டீஸ்
சிவகிரி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
சிவகிரி:
சிவகிரி அருகே தேவிபட்டணம் ஊராட்சி மன்ற பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்து கொள்ள முறைப்படியான நோட்டீஸை பஞ்சாயத்து தலைவர் வழக்கறிஞர் ராமராஜ் பொதுமக்களுக்கு வழங்கினார்.
அதில், தேவிபட்டணம் ஊராட்சிக்கு உட்பட்ட, தேவிபட்டணம் பஸ் நிறுத்தத்தில் இருந்து தட்டாங்குளம் காளியம்மன் கோவில் வழியாக சிவகிரி வரை புதிதாக தார் சாலை அமைப்பதற்கான ஆணை வந்துள்ளது. ஆகவே தேவிபட்டணம் பஸ்நிறுத்தத்தில் இருந்து தட்டாங்குளம் காளியம்மன் கோவில் வரை, ரோட்டின் இருபுறமும் உள்ள வீட்டின் அல்லது நிலத்தின் உரிமைதாரர்கள் தங்களிடம் உள்ள பட்டா அளவைவிட அதிகமாக கட்டிடம் கட்டி உள்ள அல்லது ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். இல்லையென்றால் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக அகற்ற நேரிடும். அதன் முழு செலவையும் அந்தந்த உரிமைதாரர்கள் அரசுக்கு செலுத்த அறிவுறுத்தப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.