சுகாதாரம் இன்றி இயங்கிய 2 ஓட்டல்களுக்கு நோட்டீஸ்

வேலூரில் சுகாதாரம் இன்றி இயங்கிய 2 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Update: 2023-10-05 17:19 GMT

வேலூர் நகரில் உள்ள ஓட்டல்கள் சுகாதாரமான முறையில் செயல்படுகிறதா என்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உணவு பாதுகாப்புத்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேஷ் வேலூர் அண்ணாசாலை, மக்கான் சிக்னல் பகுதியில் உள்ள ஓட்டல்களில் திடீரென சோதனை செய்தனர்.

அதில், சுகாதாரம் இன்றி இயங்கிய 2 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய ஒரு ஓட்டலுக்கு ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி வைத்திருந்த 5 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. உணவுப்பொருட்களுக்கு செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்த கூடாது. ஓட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் உணவுப்பொருட்களை வழங்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறையினர் அறிவுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்