தி.நகர் ஆகாய நடைமேம்பாலம் வரும் 13, 14-ந் தேதிகளில் மூடப்படும் என அறிவிப்பு..!

தி.நகர் ஆகாய நடைமேம்பாலம் வரும் 13, 14-ந் தேதிகளில் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-06-11 10:49 GMT

சென்னை,

தியாகராய நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாம்பலம் ரெயில் நிலையத்தில் இருந்து தியாகராய நகர் பஸ் நிலையம் வரை ரூ.28.5 கோடி செலவில் பிரமாண்ட ஆகாய நடை மேம்பாலம் கட்டப்பட்டது. இதை கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பொதுமக்கள் வசதிக்காக பாலத்தில் எஸ்கலேட்டர் வசதி, லிப்ட் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பாலத்தில் உள்ள எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட்கள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி நகரும் படிக்கட்டுகள் வருகிற 13-ந் தேதி அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும் 14-ந்தேதி அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மூடப்பட்டிருக்கும். 14-ந்தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மார்க்கெட் சாலை ரெயில் நிலைய லிப்டும் பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருக்கும்.

பணி நடைபெறும் நேரத்தில் எஸ்கலேட்டர்கள் மூடப்பட்டிருப்பின் லிப்ட் மற்றும் படிக்கட்டுகளையும், லிப்ட் மூடப்பட்டிருப்பின் எஸ்கலேட்டர்களையும் பயன்படுத்தி கொள்ள மாநகராட்சி சார்பில் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்