"தமிழகம் மட்டுமல்ல...இந்திய அளவில் இதே நிலை தான்" - அமைச்சர் மா.சுப்ரமணியன்

பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் தொய்வு உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-20 16:13 GMT

சென்னை,

பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் தொய்வு உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியதாவது:-

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா தொற்றானது 600-க்கும் மேலாக இருந்தாலும் உயிரிழப்பு இல்லாத நிலை நீடித்துக் கொண்டிருப்பது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். ஆனாலும் தொற்று வேகமாக பரவும் தன்மையுடையது என்பதை அறிந்து இதிலிருந்து நாம் மீள்வதற்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

பூஸ்டர் தடுப்பூசி போடும் பணிகளில் தமிழகத்தை பொறுத்தவரை சற்று தொய்வு இருக்கிறது. தமிழகத்தில் மட்டுமில்லாது ஒட்டுமொத்த இந்தியாவிலும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் 80 முதல் 90 சதவீதங்களை கடந்தாலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதில் தொய்வு காணப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்