சசிகலாவை அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை- ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம்
சசிகலாவுடனான சந்திப்பு யதார்த்தமானது என்றும், அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை என்றும் ஓபிஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்தார்.
தஞ்சாவூர்,
ஓ.பி.எஸ் அணியின் மூத்த தலைவராக இருக்கும் வைத்திலிங்கம் சசிகலாவை சந்தித்தார். தஞ்சாவூரில் ஒரத்தநாடு காவரப்பட்டு கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் வி.கே.சசிகலா உடன் அதிமுக எம்.எல்.ஏ வைத்திலிங்கம் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து பெற்றார்.
சசிகலாவுக்கு இனிப்பு வழங்கினார் வைத்திலிங்கம். சசிகலாவுடன் ஓ.பன்னீர் செல்வம் அணியின் முதல் சந்திப்பு இது தான்..அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் பேசி வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், சசிகலாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம், சசிகலாவுடனான சந்திப்பு யதார்த்தமானது என்று கூறினார். அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை என்றும் வைத்திலிங்கம் விளக்கம் அளித்தார்.
கட்சியை அபகரிப்பதற்கு எடப்பாடி பழிச்சாமி துடித்துக்கொண்டிருக்கிறார் என்று கூறிய அவர், எடப்பாடி பழனிச்சாமியின் ஆணவப்போக்கிற்கு தொண்டர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.