விதிகளை பின்பற்றாத22 கடைகளுக்கு அபராதம்:தொழிலாளர் துறை அதிகாரிகள் அதிரடி
விதிகளை பின்பற்றாத 22 கடைகளுக்கு தொழிலாளர் துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகளின் கீழ் மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவக்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்டத்தில் மொத்தம் 78 கடைகளில் ஆய்வு செய்தனர். அதில், முத்திரையிடப்படாத 4 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மறுமுத்திரை சான்றுகாட்டி வைக்கப்படாதது தொடர்பாக 22 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. எடையளவு குறைவு கண்டறியப்பட்டு ஒரு கடையின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மொத்தம் 27 நிறுவனங்களில் முறைகேடுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.