வடக்கு ஒன்றிய பா.ஜ.க செயற்குழு கூட்டம்

கீழ்பென்னாத்தூரில் வடக்கு ஒன்றிய பா.ஜ.க செயற்குழு கூட்டம்

Update: 2022-07-25 13:23 GMT

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னத்தூர் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. செயற்குழு கூட்டம் ஒன்றிய செயலாளர் பாவேந்தன் தலைமையில் கீழ்பென்னாத்தூரில் நடந்தது.

மாநில செயற்குழு உறுப்பினர் கருணாகரன், மத்திய அரசின் நலத்திட்ட பிரிவு மாநில செயலாளர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை மாவட்ட துணைத்தலைவர் சிவசங்கரன் வரவேற்றார்.

கூட்டத்தில் மத்தியஅரசின் நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் சிவக்குமார், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபாகரன் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் சிறுநாத்தூரில் உள்ள மயானப்பாதை முட்செடிகளால் சூழ்ந்திருப்பதை அகற்றி சீரமைக்க வேண்டும்.

கீழ்பென்னாத்தூரில் உள்ள பல்வேறு கோவில்களை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில் வடக்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் வெங்கடேஷ்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்