வடக்கு மண்டல ஐ.ஜி. திடீர் ஆய்வு

தீவிர குற்றவழக்குகள் பிரிவு அலுவலகத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. திடீர் ஆய்வு செய்தார்.

Update: 2023-05-09 19:19 GMT

வேலூர் மாவட்ட தீவிர குற்றவழக்குகள் பிரிவு அலுவலகம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது. இங்கு வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்கள், பதிவேடுகள் மற்றும் குற்றவழக்கு கோப்புகளை பார்வையிட்டார். தொடர்ந்து நீண்ட காலம் நிலுவையில் உள்ள பாலியல் பலாத்காரம், கொலை வழக்குகளின் விவரங்களையும், தலைமறைவு குற்றவாளிகள் பட்டியல்கள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படியும் அறிவுறுத்தினார். ஆய்வின்போது வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி, இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோர் உடனிருந்தனர்.

அதைத்தொடர்ந்து ஐ.ஜி. கண்ணன் வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மது, சாராய விற்பனையை தடுக்க மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் வழக்குகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அதுதொடர்பான விவரங்களை துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மற்றும் இன்ஸ்பெக்டர்களிடம் கேட்டறிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்