கஞ்சா விற்ற வடமாநில வாலிபர்

கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் போலீசில் சிக்கினார்

Update: 2023-06-23 22:21 GMT

சென்னிமலை அருகே சிப்காட் செல்லும் ரோட்டில் கஞ்சா விற்பதாக சென்னிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது ஒருவர் கஞ்சா விற்று கொண்டிருந்தார். இதனால் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சாம்செர் அலி (வயது 31) என்பதும், தொழிலாளியான இவர் சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர் கவுண்டனூர் பகுதியில் தங்கியுள்ளதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து கஞ்சா விற்றதாக அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 550 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்