வடமாநில வாலிபர் கைது
நத்தம் அருகே, மண் அள்ளிய வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நத்தம் அருகே வேம்பரளி சுங்கச்சாவடி பகுதியில் கனிமவளத்துறை மாவட்ட உதவி இயக்குனர் மாரியம்மாள் ரோந்து சென்றார். அப்போது அங்கு லாரியில் 2 பேர் பொக்லைன் எந்திரம் மூலம் கிராவல் மண் அள்ளியது தெரியவந்தது. இதுகுறித்து மாரியம்மாள், நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அதற்குள் மண் அள்ளிய 2 பேரில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து மண் அள்ளிய மற்றொருவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஷிகிந்தர் உர்னவ் (வயது 23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷிகிந்தர் உர்னவ்வை கைது செய்தனர். மேலும் லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.