திராவகத்தை மதுவுடன் கலந்து குடித்த வடமாநில தொழிலாளி சாவு

தொழிலாளி சாவு

Update: 2022-11-01 20:27 GMT

தண்ணீர் என நினைத்து திராவகத்தை மதுவுடன் கலந்து குடித்த வடமாநில தொழிலாளி இறந்தார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

லாரி கிளீனர்

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பாபு நாக் (வயது 40). இவர் கடந்த 5 மாதங்களாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பகுதியில் தனது உறவினரான பன்சிதார் என்பவருடன் தங்கி இருந்து லாரி கிளீனராக வேலை பார்த்து வந்தார். பாபுநாக்கிற்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர் கடந்த 30-ந் தேதி மது குடித்து உள்ளார். அப்போது தண்ணீர் என நினைத்து கழிவறையை சுத்தம் செய்ய வைத்திருந்த திராவகத்தை மதுவில் கலந்து குடித்துவிட்டதாக தெரிகிறது.

சாவு

இதனால் வயிற்று வலியால் துடித்த பாபுநாக்கை அவருடைய உறவினரான பன்சிதார் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் பாபுநாக் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்