கிணற்றில் தவறி விழுந்து வடமாநில தொழிலாளி சாவு

தொழிலாளி சாவு

Update: 2022-11-05 20:49 GMT

பீகார் மாநிலம் மீஜப்பூர் மாவட்டம் கல்யாண் பூர் பகுதியை சேர்ந்தவர் அசோக் சிங் (வயது 41). இவர் ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த சித்தோடு கங்காபுரம் பகுதியில் உள்ள தனியார் சாய தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சாய தொழிற்சாலை அருகே உள்ள கிணற்றின் அருகில் உட்கார்ந்து அசோக் சிங் மது அருந்தியதாக தெரிகிறது. இதில் அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தார். இதைத்தொடர்ந்து அவர் கிணற்றில் பிணமாக மிதந்தார். இதுபற்றி அறிந்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அசோக் சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அருசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்