வடமதுரை பேரூராட்சி கூட்டம்

வடமதுரையில் பேரூராட்சி கூட்டம் நடந்தது.

Update: 2023-06-30 19:30 GMT

வடமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் வார்டு கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு தலைவர் நிருபாராணி கணேசன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மலைச்சாமி, செயல் அலுவலர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். இதில் ஏ.வி.பட்டி சாலையில் மந்தைகுளம் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி அமைத்தல், ஏ.வி.பட்டி முதல் தொட்டையகவுண்டனூர் வரை குடிநீர் குழாய் அமைத்தல், செங்குளத்துப்பட்டியில் பாலத்துடன் கூடிய கால்வாய் மற்றும் குடிநீர் குழாய் அமைத்தல் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் 14-வது வார்டு கவுன்சிலர் கணேசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்