வடகட்டளை கோம்பூர் சாலை சீரமைப்பு
`தினத்தந்தி' செய்தி எதிரொலியால், கூத்தாநல்லூர் அருகே வடகட்டளை கோம்பூர் சாலை சீரமைக்கப்பட்டது.
கூத்தாநல்லூர்:
`தினத்தந்தி' செய்தி எதிரொலியால், கூத்தாநல்லூர் அருகே வடகட்டளை கோம்பூர் சாலை சீரமைக்கப்பட்டது.
பழுதடைந்த சாலை
கூத்தாநல்லூர் அருகே உள்ளது, வடகட்டளை கோம்பூர் கிராமம். இந்த கிராமம் வெள்ளையாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன. இங்கு அமைக்கப்பட்டுள்ள சாலை மிகவும் பழுதடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடந்தன.இதனால், இந்த சாலை வழியாக செல்லும் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் தட்டுத்தடுமாறி சென்று வந்தனர். ஆகவே, இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
`தினத்தந்தி' செய்தி எதிெராலி
இதுகுறித்து `தினத்தந்தி'யில் செய்தி பிரசுரமாகி இருந்தது. இதன் எதிரொலியாக பழுதடைந்த இந்த சாலை சீரமைக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.