ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றி யாராலும் தடுக்க முடியாது - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க வெற்றி யாராலும் தடுக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Update: 2023-02-07 04:29 GMT

ஈரோடு,

ஈரோட்டில் இன்று காலை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் முதல்கட்ட தேர்தல் பிரசாரம் ஆலய வழிபாட்டோடு நடைபெற்று வருகிறது. இன்று தொடக்க நாளே குபேர மூலையில் தொடங்கப்பட்டு உள்ளது. குபேர மூலை என்றாலே செல்வத்தை பெருக்குவதும், வெற்றியை பெருக்குவதும் ஆகும். திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம்.

நாளை மறுதினம் (9-ந்தேதி) வேட்பாளர் அறிமுக கூட்டம் பிரம்மாண்ட முறையில் நடைபெறுகிறது. அ.தி.மு.க வெற்றி யாராலும் தடுக்க முடியாது. இடைத்தேர்தலில் வரலாற்றை படைப்போம். இரட்டை இலை என்றாலே வெற்றி என்பார்கள். ஒற்றுமை உணர்வோடு பணிகள் ஆற்றி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்