உரிமம் பெறாத தனிநபர், நிறுவனங்களில் விதைகளை வாங்கக்கூடாது

உரிமம் பெறாத தனிநபர்கள் அல்லது நிறுவனங்களிடம் இருந்து விதைகளை வாங்கக்கூடாது என்று விதை ஆய்வு துணை இயக்குனர் சித்ரா அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2023-01-20 18:45 GMT

ரிமம் பெறாத தனிநபர்கள் அல்லது நிறுவனங்களிடம் இருந்து விதைகளை வாங்கக்கூடாது என்று விதை ஆய்வு துணை இயக்குனர் சித்ரா அறிவுறுத்தி உள்ளார்.

உளுந்து, பச்சைப்பயறு சாகுபடி

நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களுக்கான விதை ஆய்வு

துணை இயக்குனர் சித்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் சம்பா நெல் அறுவடை பணி நடைபெற்று வருகிறது.

இதை தொடர்ந்து நடப்பு ரபி பருவத்தில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபடுவார்கள். எனவே உளுந்து மற்றும் பச்சை பயிறு விதைகளை விதை வணிக உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும்.

விற்பனை பட்டியல்

விதைகளை வாங்கும் விவசாயிகள் தவறாமல் அதற்கான விற்பனைப் பட்டியலில் நாள், விவசாயி பெயர், பயிர் ரகம், நிலை குவியல் எண், காலாவதி நாள் ஆகியவற்றை குறிப்பிட்டுத்தருமாறு கோரி பெற வேண்டும்.

பிறகு விதைகளின் தரம் காரணமாக ஏதேனும் பிரச்சினைகள் எழும் நிலையில், விற்பனைப் பட்டியல் மூலம் தீர்வு காண முடியும். உளுந்து மற்றும் பச்சைபயிறு விதைகளை விதைப்பதற்கு முன், மண்ணில் போதுமான ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்த பிறகு,விதைக்கும் பணியை தொடங்க வேண்டும்.

உரிமம் பெறாதவர்களிடம் விதை வாங்க கூடாது

மண்ணில் போதுமான ஈரப்பதம் இல்லாத நிலையில் தரமான விதைகளாக இருந்தாலும், அவற்றின் முளைப்புத்திறன் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நல்ல முளைப்புத்திறன் உள்ள பூச்சி தாக்குதல் இல்லாத தரமான சான்றட்டை பொருத்திய விதைகளை, விதைத்து பயன்பெற

வேண்டும். விதை வணிக உரிமம் பெறாத தனிநபர்கள் அல்லது நிறுவனங்களிடம் இருந்து விதைகளை வாங்கக்கூடாது. இது குறித்து மேலும் விவரங்களை அந்தந்த பகுதி விதை ஆய்வாளர்களை அணுகி தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்