ஜனநாயக நாட்டில் எந்த கட்சியிலும் இதுபோன்ற மோசமான பொதுக்குழு நடந்ததில்லை - ஓ.பன்னீர் செல்வம்

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மாற்றுக் கட்சியிலிருந்து ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இணைந்தனர்.

Update: 2022-10-08 16:23 GMT

சென்னை,

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மாற்றுக் கட்சியிலிருந்து ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இணைந்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்த முன்னாள் எம்.மைத்ரேயன் என்பவரும் ஓபிஎஸ் அணியில் இணைந்தார்.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது ;

எம்ம்ஜிஆர் கட்சியை உருவாக்கிய போது அவர் விதித்த சட்ட விதிகளை போல் மற்ற கட்சிகளை சட்ட விதிகள் இல்லை. தலைமை பொறுப்பை தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என சட்ட விதிகளை உருவாக்கியவர் எம்ஜிஆர்.

அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி. அதிமுக சட்ட விதிகளைபோல், மற்ற கட்சிகளில் சட்ட விதிகள் இல்லை.

சர்வாதிகார எண்ணம் கொண்டவர்கள் தலைமை பொறுப்பில் வரக்கூடாது என இவ்விதிகளை வகுத்தார் ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் இதுபோன்ற மோசமான பொதுக்குழு நடந்ததில்லை என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்