முதல்நாளில் யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை

உள்ளாட்சிகளில் காலிபதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை.

Update: 2022-06-20 19:44 GMT

உள்ளாட்சிகளில் காலிபதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை.

இடைத்தேர்தல்

திருச்சி மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அல்லூர் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் (வார்டு எண்.5), லால்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரியூர் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் (வார்டு எண்.1), மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எப்.கீழையூர் (வார்டு எண்.5) மற்றும் புத்தாநத்தம் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் (வார்டு எண்.5), மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தீராம்பாளையம் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் (வார்டு எண்.2,3,5,6 மற்றும் 8), புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெய்க்குளம் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் (வார்டு எண்.7), தா.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிட்டிலரை கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் (வார்டு எண்.9), திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பனையக்குறிச்சி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் (வார்டு எண்.3), தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பிடாரமங்கலம் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் (வார்டு எண்.3), துறையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொட்டையூர் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் (வார்டு எண்.4) ஆகிய பதவியிடங்களுக்கு தேர்தல் நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை

இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கியது. வருகிற 27-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும், 28-ந்தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடக்கிறது, 30-ந்தேதி வேட்பு மனுக்களை திரும்பப்பெறலாம். முதல் நாளான நேற்று யாரும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யவில்லை. அடுத்த மாதம் (ஜூலை) 9-ந்தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். 12-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. 14-ந்தேதி தேர்தல் நடைமுறைகள் முடிவு பெறும். மேற்காணும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் நடைபெறும் 10 ஊராட்சிகளின் எல்லை முழுவதும் 20-ந்தேதி முதல் அடுத்த மாதம் 14-ந்தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்