"அரசியல் ரீதியான கருத்துகளை யாரும் தடுக்க முடியாது" - கவர்னர் தமிழிசை ஆவேச பேட்டி
ஜனநாயக நாட்டில் கருத்து சொல்வதில் யாரையும் யாரும் தடுக்கமுடியாது என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
திருச்சி,
ஆளுநர்கள் உட்பட அனைவருக்கும் கருத்துரிமை இருப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். திருச்சி விமானநிலையத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
அரசியல் ரீதியிலான கருத்துக்களை சிலர் சொல்ல முயன்றால், அதனை யாரும் தடுக்கமுடியாது. சாதாரண மனிதர்களுக்கு கருத்துரிமை இருப்பது போல ஆளுநர்களுக்கும் கருத்துரிமை இருக்கிறது.
ஜனநாயக நாட்டில் கருத்து சொல்வதில் யாரையும் யாரும் தடுக்கமுடியாது. இவ்வாறு அவர் கூறினார்.