முதல் அமைச்சரின் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது: சபாநாயகர் அப்பாவு

முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-16 10:38 GMT

நெல்லை,

 நெல்லையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சபாநாயகர் அப்பாவு கூறியதாவது: "இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி தனது அமைச்சரவைக்கு யார், யாருக்கு எந்த, எந்தத் துறை ஒதுக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக முதல்வருக்குத்தான் உள்ளது. ஆனால் முதல்வரின் பரிந்துரையை ஆளுநர் திருப்பி அனுப்பியது வேதனையாகவே உள்ளது. அந்த செயலை ஆளுநர் தவிர்த்திருக்க வேண்டும்.

முதல்வரின் அதிகாரத்தில் யாரும் தலையிட முடியாது. சட்டம் அதைத்தான் சொல்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி விசயத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அவருக்கு உடல்நிலை சரியில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி நீதிமன்றக் காவல், வழக்கு நிலுவையில் இருக்கும்போது அமைச்சர் பதவியில் இருக்கக்கூடாது என எந்த சட்டத்திலும் இடம் இல்லை. தண்டனை பெற்றால் மட்டும் தான் பதவியில் இருக்கக் கூடாது. ஆளுநர் தொடர்ந்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறார்" என்றார்

Tags:    

மேலும் செய்திகள்