எனது வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்கவில்லை- செந்தில் பாலாஜி விளக்கம்
வருமான வரியை முறையாக செலுத்தக்கூடியவர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. என்று செந்தில் பாலாஜி கூறினார்.
சென்னை,
அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதவாது:-
*வருமான வரி பற்றி ஏற்கனவே ஆர்.எஸ் பாரதி கூறிவிட்டார்.
*எனது சகோதரர், உறவினர், நண்பர்கள் இல்லத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
*என் வீட்டில் சோதனை நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயராக இருக்கிறேன்.
*எவ்வளவு நாட்கள் நடத்தினாலும் முழு ஒத்துழைப்பு அளிக்க தயராக இருக்கிறோம்.
*வருமான வரி சோதனை நிறைவடைந்த பிறகு முழு விவரங்களுடன் பேட்டி அளிக்கிறேன்.
*சோதனை நடக்கும் இடங்களில் கட்சியினர் இருக்கக் கூடாது.
*முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறினேன்.
*சட்டமன்ற தேர்தலின் போதே வருமான வரி சோதனையை எதிர்கொண்டோம்.
* கேட்டை திறப்பதற்கு முன்பே அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளனர்.
* வருமான வரியை முறையாக செலுத்தக்கூடியவர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
வருமான வரியை முறையாக செலுத்தக்கூடியவர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. என்று செந்தில் பாலாஜி கூறினார்.