எருது விடும் விழாவில் கட்டணம் வசூலிக்கக்கூடாது

எருது விடும் விழாவில் கட்டணம் வசூலிக்கக்கூடாது என விலங்குகள் நல வாரிய உறுப்பினர் அறிவுறுத்தினார்.

Update: 2023-04-07 18:57 GMT

பேரணாம்பட்டு அருகே உள்ள சொக்க ரிஷிகுப்பம் கிராமத்தில் இன்று (சனிக்கிழமை) எருது விடும் விழா நடைபெற உள்ளது. இதற்காக சொக்கரிஷி குப்பம் கிராமத்தில் வாடிவாசல் பகுதியில் தடுப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று மாலை சொக்கரிஷி குப்பம் கிராமத்திற்கு மத்திய விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மிட்டல் வருகை புரிந்து பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து விழா குழுவினரிடம் போட்டியில் பங்கேற்கும் எருதுகளின் உரிமையாளர்களுக்கு டோக்கன்கள் வழங்க ஏன் பணம் பெறப்படுகிறது. பணம் வசூலிக்கப்பட கூடாது எனவும், இலவசமாக டோக்கன்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதற்கு விழாக் குழுவினர் அனைத்து இடங்களிலும் பணம் பெறுவது நடைமுறையில் இருப்பதாகவும், இனிவரும் காலங்களில் டோக்கன் கட்டணம் வாங்க மாட்டோம் என பதிலளித்தனர். சப்- கலெக்டர் வெங்கட்ராமன், பேரணாம்பட்டு தாசில்தார் நெடுமாறன், பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், கால்நடை மருத்துவ குழுவினர், வருவாய் துறையினர் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்