அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என்று எந்த கோர்ட்டும் சொல்லவில்லை: ஒ பன்னீர் செல்வம்

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இ

Update: 2023-04-22 02:50 GMT

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதற்கிடையே, திருச்சியில் முன்னாள் முதல் அமைச்சர் ஒ பன்னீர் செல்வம் நாளை மறுநாள் மாநாடு நடத்துகிறார். இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவு நிர்வாகிகள் முழு வீச்சில் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். இந்த மாநாட்டில் அதிமுக கொடியை ஓபிஎஸ் அணி பயன்படுத்தக் கூடாது என்று அதிமுக எச்சரித்து வருகிறது.

மீறி பயன்படுத்தினால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்போம் என்று அதிமுக எச்சரித்து உள்ளது. ஆனால், அதிமுக கொடிகளை பயன்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது என்று ஓ பன்னீர் செல்வம் அணி நிர்வாகிகள் கூறி வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் முதல் அமைச்சர் ஒ பன்னீர் செல்வம் அதிமுக கொடி கட்டிய காரில் வந்தார். அவரிடம் செய்தியாளர்கள், அதிமுக கொடியை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இக்கேள்விக்கு பதிலளித்துள்ள ஓ பன்னீர் செல்வம், எந்த நீதிமன்றம் அப்படி சொல்லியிருக்கிறது என்று பதில் அளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்