சாதாரண வாடிக்கையாளர்களுக்கு எந்த சலுகையும் வழங்குவதில்லை - கார்பரேட் நிறுவனங்களுக்கான கடனில் பாதியை தள்ளுபடி செய்கிறார்கள் - வங்கிகள் மீது மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி
சாதாரண வாடிக்கையாளர்களுக்கு எந்த சலுகையும் வழங்குவதில்லை. ஆனால், கார்பரேட் நிறுவனங்கள் கடனில் பாதியை தள்ளுபடி செய்கிறார்கள் என்று வங்கிகள் மீது மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
சாதாரண வாடிக்கையாளர்களுக்கு எந்த சலுகையும் வழங்குவதில்லை. ஆனால், கார்பரேட் நிறுவனங்கள் கடனில் பாதியை தள்ளுபடி செய்கிறார்கள் என்று வங்கிகள் மீது மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
வங்கிக்கடன் வழக்குகள்
மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் நேற்று வழக்குகளை விசாரித்தனர். அப்போது வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு வகை வங்கிக்கடன்கள் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்தன.
கடன் தொகை நிலுவை குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு வங்கிகள் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளன. அந்த நோட்டீஸ் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
நீதிபதிகள் சரமாரி கேள்வி
இந்த மனுக்கள் விசாரித்தபோது, வங்கிகளுக்கு நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை சரமாரியாக எழுப்பினர்.
"கடன் வாங்கிவிட்டு முறையாக திருப்பிச்செலுத்தும் வாடிக்கையாளர்கள் மீண்டும் கடன் கேட்டால், வங்கிகள் கடன் கொடுப்பதில்லை. ஆனால் பல்வேறு மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்கின்றன. பல நேரங்களில் இவர்கள் நியாயமாக செயல்படுவதில்லை" என்று நீதிபதிகள் அதிருப்தியும், வேதனையும் தெரிவித்தனர்.
மேலும் "கடன் தொகையை செலுத்த முடியாத நேரத்தில் சாதாரண வாடிக்கையாளர்களுக்கு எந்த சலுகையும் வழங்குவதில்லை. ஆனால் கார்பரேட் நிறுவனங்கள் பெற்ற கடன் தொகையில் பாதியை தள்ளுபடி செய்கிறார்கள்" என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
பின்னர் இந்த வழக்குகளின் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.