சென்னைக்கு தீவிர மழை வாய்ப்பு இல்லை - தமிழ்நாடு வெதர்மேன்

சென்னைக்கு தீவிர மழை வாய்ப்பு இல்லை லீவ் விடுவார்கள் என்று பார்க்க வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் கூறி உள்ளார்.

Update: 2022-11-03 05:24 GMT

சென்னை

சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் மழை வெகுவாக குறைந்துவிட்டது. இந்த நிலையில் தமிழ்நாடு வானிலை தொடர்பாக காலை தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் நான்கு முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டு உள்ளார். கடந்த 4 மணி நேரமாக சென்னையில் எந்தப் பகுதியிலும் மழை பெய்யவில்லை. இனி வரும் நேரங்களிலும் இதே நிலை நீடிக்கும். பள்ளிக் குழந்தைகளும் ஆசிரியர்களும் பள்ளிக்குத் தயாராக இருக்க வேண்டும்.

லீவ் விடுவார்கள் என்ற அறிவிப்புக்காக டிவி பார்க்க வேண்டாம். மழை சென்னையில் இருந்து மழை கடலூர் பெல்ட் நோக்கி சென்றுள்ளது. அதன்பின் அது டெல்டா மற்றும் தெற்கு பெல்ட் நோக்கி நகரும். விருதுநகர், ராமதாபுரம் மதுரை மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்ய போகிறது. அடுத்த இரண்டு தினங்களுக்கு மழை உள் தமிழ்நாடு டெல்டா மாவட்டங்களுக்கு, தென் மாவட்டங்களுக்கு நகரும்.

சென்னை மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் இங்கும், அங்கும் லேசான மழை பெய்யும். ஆனால் தீவிர மழை பெய்ய வாய்ப்பு கிடையாது என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது போஸ்டில் குறிப்பிட்டு உள்ளார். 

Full View


Tags:    

மேலும் செய்திகள்