கோவை குற்றால அருவிக்கு செல்ல தடை

தொடர்மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் கோவை குற்றால அருவிக்கு செல்ல தடை விதித்து வனத்துறை அறிவித்து உள்ளது.

Update: 2022-11-13 18:45 GMT

பேரூர்

தொடர்மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் கோவை குற்றால அருவிக்கு செல்ல தடை விதித்து வனத்துறை அறிவித்து உள்ளது.

கோவை குற்றால அருவி

கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் கோவை குற்றால அருவி உள்ளது. இது அடர்ந்த வனப்பகுதி மற்றும் வனவிலங்கு கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இருக்கிறது. எனவே சுற்றுலா பயணிகளை சாடிவயல் சோதனை சாவடியில் இருந்து வனத் துறையினர் தங்கள் வாகனங்களில் அருவிக்கு அழைத்து செல்கிறார்கள்.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. அதுபோன்று கோவை குற்றால அருவி இருக்கும் பகுதியிலும் மழை வெளுத்து வாங்கியது.

நீர்வரத்து அதிகரிப்பு

இதன் காரணமாக அருவிக்கு வரும் தண்ணீரின் வரத்து அதிக ரித்தது. எனவே அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து வனத்துறை அறிவித்து உள்ளது.

மேலும் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க சாடிவயல் சோதனை சாவடியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கண்காணிப்பு

இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

சிறுவாணி மலைய டிவார பகுதியில் 23 மில்லிமீட்டர் மழை பெய்து உள்ளது.

இதனால் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. எனவே பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

தற்போது அருவிக்கு வரும் தண்ணீரின் அளவு, சிறுவாணி மலையடிவாரத்தில் பெய்யும் மழை ஆகியவற்றை கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்