தூத்துக்குடிதுறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்:விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று காலை முதல் லேசான சாரல் மழை பெய்தது. துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Update: 2023-02-02 18:45 GMT

தூத்துக்குடியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று காலை முதல் லேசான சாரல் மழை பெய்தது. துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலையில் இலங்கையில் கரையை கடந்தது. இந்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும், ஆகையால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

சாரல் மழை

இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. பகல் நேரத்திலும் குளிராக இருந்தது. மேலும் காலை முதல் பலத்த காற்று வீசியது. இதனால் குளிர்ந்து காற்று வேகமாக வீசியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டனர். அதே போன்று தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. இதனால் இதமான சூழல் நிலவியது. வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை தொடர்ந்து, நேற்று 3-வது நாளாக விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 245 விசைப்படகுகளும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

புயல் எச்சரிக்கை கூண்டு

அதே போன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையை கடந்து மன்னார்வளைகுடா, குமரிக்கடல் பகுதிக்குள் நுழைந்து உள்ளதை தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு அறிவிக்கும் வகையில் நேற்று 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்