தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகத்தில் 2-ம் எண்புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
புயல்
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்ற ஹாமூன் புயலாக மாறியது. நேற்று காலையில் தீவிர புயலாக வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவியது. இந்த புயல் மேலும் வலுப்பெற்ற வடகிழக்கு வங்கக்கடலில் மிகதீவிர புயலாக நிலவி வருகிறது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேச கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
எச்சரிக்கை கூண்டு
இதனை தொடர்ந்து, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு ஹாமூன் புயல் குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. இதனால் கப்பல்கள் புயல் தாக்கம் உள்ள பகுதிகளுக்கு செல்லாமல் தவிர்ப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.