நித்திய கல்யாணி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்
கடையம் நித்திய கல்யாணி அம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நடந்தது.
கடையம்:
கடையம் நித்திய கல்யாணி அம்மன் உடனுறை வில்வ வனநாதர் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், பல்வேறு வாகனங்களில் வீதிஉலாவும் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் முக்கிய ரதவீதிகள் வழியாக சென்று நிலையத்தை அடைந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) முருகன், தக்கார் கோமதி, ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் மண்டகப்படிதாரர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.