நிறைகுளத்து அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா

சாயல்குடியில் நிறைகுளத்து அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழா நடந்தது.

Update: 2023-07-15 18:45 GMT

சாயல்குடி, 

சாயல்குடி சிறை மீட்ட நிறைகுளத்து அய்யனார் வன்னியராய சுவாமி கருப்பணசாமி கோவில் புரவி எடுப்பு பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு சாயல்குடி ஜமீன்தார் சிவஞான பாண்டியன் தலைமை தாங்கினார். .சாயல்குடி யாதவ மகாசபை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கடந்த 8-ந்தேதி காப்பு கட்டுதலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. நேற்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்த பெண்களும் ஆண்களும் சாயல்குடி ராமநாதபுரம் சாலை வழியாக ஊர்வலமாக குதிரை மற்றும் தவளும் பிள்ளை உள்ளிட்ட களிமண்ணால் செய்யப்பட்ட சுவாமி பொம்மைகளை எடுத்து நகர் வலமாக வந்து அய்யனார் கோவிலை வந்தடைந்தனர். பின்பு வாணவேடிக்கையுடன் பொங்கல் பானை எடுத்து பெண்கள் ஊர்வலமாக சென்று பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியாளர்கள், சாயல்குடி யாதவ மகா சபை நிர்வாகிகள் மற்றும் சாயல்குடி யாதவ இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்