தமிழ்நாட்டில் நிபா வைரஸ் கண்டறியப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அடுத்த மூன்று மாதங்களுக்கு மக்கள் கவனமுடன் இருக்கவேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை,
சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை என தெரிவித்தார்.
தமிழகத்தில் ஜனவரி முதல் தற்போது வரை 4 ஆயிரத்து 48 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர் என்று கூறிய அவர், மழைக்காலங்களில் டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவுவது வழக்கமானது என்று கூறினார். மேலும், அடுத்த மூன்று மாதங்களுக்கு மக்கள் கவனமுடன் இருக்கவேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.