நீலகிரி: சாலையோரம் முகாமிட்டிருக்கும் காட்டு யானைகள்... விரட்ட முடியாமல் வனத்துறையினர் தவிப்பு
கேரளாவில் இருந்து ஆறு யானைகள் தமிழக எல்லையை கடந்து சேரங்கோடு பகுதியில் முகாமிட்டுள்ளது.
நீலகிரி,
கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியின் சாலையோர புல்வெளியில் 6 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது.
கேரளாவில் இருந்து ஆறு யானைகள் தமிழக எல்லையை கடந்து சேரங்கோடு பகுதியில் முகாமிட்டுள்ளது. சாலை ஓரத்தில் உள்ள புல்வெளியில் தற்போது யானைகள் முகாமிட்டு இருப்பதால், வனத்துறையினரும் யானைகளை விரட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சாலையோரம் செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் யானை அருகில் செல்ல வேண்டாம் எனவும் யானைகளை கோபப்படுத்தும் வகையில் ஹாரன் அடிக்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்