மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வினியோகம்

செய்யாறு அரசு பள்ளியில் மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2022-09-21 12:16 GMT

செய்யாறு

செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சி சார்பில் செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். நகரமன்ற உறுப்பினர் கே.விஸ்வநாதன், துப்புரவு அலுவலர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை உமாமகேஸ்வரி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக நகரமன்ற தலைவர் ஆ.மோகனவேல் கலந்துகொண்டு மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் நிலவேம்பு குடிநீர் வகுப்பு வாரியாக சென்று வழங்கப்பட்டது.

முடிவில் துப்புரவு ஆய்வாளர் மதனராசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்