அரசு பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர்
அரசு பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
நாகை மாவட்டம் வாய்மேடு அருகே அண்ணாப்பேட்டையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் காய்ச்சலை தடுக்கும் விதமாக சித்த மருத்துவத் துறை சார்பாக நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். இதில் வாய்மேடு சித்த மருத்துவ அலுவலர் கவிதா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.