சென்னை புழல் சிறையில் துணை ஜெயிலர் மீது நைஜீரிய கைதி தாக்குதல்

நைஜீரிய கைதி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-27 11:48 GMT

சென்னை,

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இசுபா அகஸ்டின் என்ற நபர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இருந்து 2 செல்போன்கள், சிம் கார்டுகள், இயர் பட்ஸ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

புழல் சிறையில் இசுபா அகஸ்டின் தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் துணை ஜெயிலர் சாந்தகுமார் சிறைக்குள் ரோந்து சென்ற போது நைஜீரிய கைதி அகஸ்டின், வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் தான் வைத்திருந்த உணவு சாப்பிடும் தட்டால் துணை ஜெயிலரை தாக்கியுள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்த சிறைக்காவலர்கள் நைஜீரிய கைதியை தடுத்து சிறையில் அடைத்தனர். கையில் காயமடைந்த சாந்தகுமார், சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக நைஜீரிய கைதி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Full View
Tags:    

மேலும் செய்திகள்