பா.ம.க. பொதுக்குழு கூட்டம்
பர்கூர் தெற்கு ஒன்றியம் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் போச்சம்பள்ளியில் நடந்தது.
மத்தூர்
பர்கூர் தெற்கு ஒன்றியம் பா.ம.க. பொதுக்குழு கூட்டம் போச்சம்பள்ளியில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் இளவரசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கலந்து கொண்டு பேசுகையில், கிராமங்கள்தோறும் பா.ம.க. கொடி ஏற்றுவது, திண்ணை பிரசாரம் மேற்கொள்வது, ஏழை, எளிய பள்ளி மாணவர்களுக்கு பேனா பென்சில் நோட்டு புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். வருகிற உள்ளாட்சி தேர்தலில் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் ஆகியோர் வெற்றி பெறவேண்டும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை பா.ம.க. கோட்டையாக மாற்ற வேண்டும் என்று கூறினார். கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் மூர்த்தி, முன்னாள் வன்னியர் சங்க தலைவர் அண்ணாமலை, முன்னாள் மாவட்ட செயலாளர் சிவானந்தம், குள்ளம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சண்முகம், தலைமை கழக பேச்சாளர் குலேந்திரன், பசுமை தாயகம் மாவட்ட செயலாளர் கே.ஆர்.கிருபாகரன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் சரவணன், முன்னாள் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பழனிவேல் மற்றும் மனோகரன், மணி உள்பட ஏராளமான பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.