பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு: தொழிலாளிக்கு கத்திக்குத்து; நண்பர் கைது
பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்திய நண்பர் கைது செய்யப்பட்டார்.
தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே திம்மசந்திரம் நேதாஜி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 32). கூலித்தொழிலாளி. இருதுகோட்டை பக்கமுள்ள நெமிலேரியை சேர்ந்தவர் மணிகண்டன் (24). தொழிலாளிகளான இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தியை தாக்கி கத்தியால் வயிற்றில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.