பெண் தற்கொலை

விழுப்புரம் அருகே பெண் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-10-21 18:45 GMT

விழுப்புரம் அருகே உள்ள வி.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுரு மனைவி அபிதா (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. 5 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. சிவகுரு கூலி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அபிதா, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவ்வப்போது சிகிச்சைக்கு சென்று வந்துள்ளார். நேற்று காலை அபிதா, வீட்டில் இருந்த இரும்பு குழாயில் துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்