டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-09-21 19:00 GMT

திருப்பத்தூர்

திருப்புத்தூரில் நேற்று மாணவ, மாணவிகள் பங்கேற்ற டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை, திருப்பத்தூர் அரசு மருதுபாண்டியர் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சாந்தி பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார். டாக்டர்கள் தமிழ்செல்வன், முத்துகுமார், பாசில், ஆமீனா பாதம் ஆகியோர் பங்கேற்றனர். நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரி முதல்வர் சுரேஷ் பிராபகர் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தில் டெங்கு விழிப்புணர்வு பதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்தி அண்ணாசிலை, மதுரை ரோடு, அஞ்சலக வீதி, தேரடி வீதி, நான்கு ரோடு, பஸ் நிலையம் வழியாக காந்தி சிலையை அடைந்தனர்.

அங்கு பேரூராட்சி சேர்மன் கோகிலாராணி நாராயணன், பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். இதில் துணை சேர்மன் கான் முகமது, பேரூராட்சி கவுன்சிலர்கள் பஷீர் அகமது, சீனிவாசன், சரண்யா ஹரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கல்லூரி ஆசிரியர்கள் சதக்கத்துல்லா, சிவநேசன், பொன்னுச்சாமி, பூவிழி, சாந்தி, மோனிஷா ஆகியோர் செய்தனர். வெங்கடேஷன் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்