புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை

கே.வி.குப்பம் அருகே புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-06-29 15:08 GMT

கே.வி.குப்பம் தாலுகா காங்குப்பத்தை அடுத்த துரைமூலை கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் சூரியா (வயது 21). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர் 4 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

அவரை உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்