புதிதாக கட்டப்பட்ட வி.எஸ்.ஆர். லாட்ஜ்:சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்

சாத்தான்குளத்தில் புதிதாக கட்டப்பட்ட வி.எஸ்.ஆர். லாட்ஜை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

Update: 2023-05-19 18:45 GMT

திசையன்விளை:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வி.எஸ்.ஆர்.லாட்ஜ் திறப்பு விழா நடந்தது. தொழில் அதிபர் வி.எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சபாநாயகர் அப்பாவு ரிப்பன் வெட்டி வி.எஸ்.ஆர்.லாட்ஜை திறந்து வைத்தார். நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் வரவேற்றார். ராதாபாய் ராமச்சந்திரன், ராஜேஷ்வரி முருகானந்தம், செந்தூர் ராணி ராஜ்குமார், கனகாம்பிகை சுபாஷ், ஒமேகா சுரேஷ், சவுமியா தேவி ஜெகதீஷ் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர்.

விழாவில் பஞ்சாயத்து தலைவர்கள் சற்குணராஜ் (குட்டம்), அனிதா பிரின்ஸ் (குமாரபுரம்), சாந்தா மகேஷ்வரன் (அப்புவிளை), ஜோசப் நாடார் (சாத்தான்குளம்), ஸ்ரீதர் (பேய்க்குளம்), இந்து முன்னணி பொதுச்செயலாளர் அரசு ராஜா, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் ஜோசப், நவ்வலடி சரவணகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர் முன்னதாக விழாவிற்கு வந்தவர்களை தொழில் அதிபர்கள் வி.எஸ்.ஆர்.சுபாஷ், வி.எஸ்.ஆர்.சுரேஷ் ஆகியோர் வரவேற்றனர். ராதாபுரம் யூனியன் தலைவர் சவுமியா ஜெகதீஷ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்