புதிய வாக்காளர் சேர்க்கும் முகாம்
செங்கோட்டையில் புதிய வாக்காளர் சேர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது
செங்கோட்டை:
செங்கோட்டையில் புதிய வாக்காளர் சேர்த்தல்-நீக்கல் மற்றும் திருத்தம் செய்யும் முகாம் நடைபெற்று வருகிறது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பொ.சிவபத்மநாதன் ஆலோசனையின் பேரில் செங்கோட்டை நகர செயலாளர் வழக்கறிஞர் ஆ.வெங்கடேசன் தலைமையில் முகாம் நடைபெறும் இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு முகவருக்கான படிவத்தினை தி.மு.க.வினர் வழங்கினர். நகர அவைத்தலைவர் காளி உள்பட பலா் கலந்து கொண்டனா்.