பிள்ளையார்குளத்தில் புதிய மின்மாற்றிகள்; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
பிள்ளையார்குளத்தில் புதிய மின்மாற்றிகளை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இட்டமொழி:
முனைஞ்சிப்பட்டி பஞ்சாயத்து பிள்ளையார்குளம் ஊரில் 2 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நேற்று இயக்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் வட்டார தலைவர்கள் ரவீந்திரன், ராமஜெயம், தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட பொதுச்செயலாளர் நம்பிதுரை, இளைஞர் காங்கிரஸ் நிக்சன், மின்வாரிய செயற்பொறியாளர் ஜான் பிரிட்டோ, உதவி செயற்பொறியாளர்கள் ஆஷா, ஜெயசீலன், லிடியா ஜோய்லின், உதவி மின் பொறியாளர்கள் அன்பு சரவணன், ஜெயசிங் தர்மராஜ், பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.