கோணேஸ்வரர் கோவிலில் புதிய தேர் அமைக்கும் பணி தொடங்கியது

கோணேஸ்வரர் கோவிலில் புதிய தேர் அமைக்கும் பணி தொடங்கியது

Update: 2022-06-18 16:23 GMT

குடவாசல்

குடவாசல் கோணேஸ்வரர் கோவிலுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.28.5 லட்சம் செலவில் புதிய தேர் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று இலுப்பை மரங்களை கொண்டு தேர் அமைக்கும் பணி தொடங்கியது. இதற்கான நிகழ்ச்சியில் நாகை இந்து சமய அறநிலையத்துறை உதவி செயற்பொறியாளர் குலோத்துங்கன், கோவில் செயல் அலுவலர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது தேர் அமைக்கும் தொழிலாளர்கள் விக்னேஸ்வர பூஜை செய்து வேலையை தொடங்கினர். அப்போது தக்கார் ஆரோக்கியமதன், கோவில் எழுத்தர் முருகன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்