புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-05-01 16:58 GMT

புதிய தமிழகம் கட்சி வேலூர் மாவட்டம் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட செயலாளர் கந்தன், கே.வி.குப்பம் ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசின் தொழிலாளர் விரோத 12 மணி நேர வேலை திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்